கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை , கலுகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பஸ்சொன்றும், பாடசாலை சேவையிலிருந்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்பவத்தில் பாடசாலை மாணவர்களும் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்









