Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

டி-20 உலகக்கிண்ண அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் முழுவதும் கொண்டாட்டம்

ஆனி 25, 2024
வகை: அண்மைய செய்திகள், முதன்மை செய்தி, விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
டி-20 உலகக்கிண்ண அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான்

Social Media Post Templates

டி-20 உலகக் கிண்ண தொடர் வரலாற்றில் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

இன்றைய தினம் டி-20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்களினால் வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியது.

மேற்கிந்திய தீவுகளின் கிங்ஸ் டவுன் மைதானத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து, 115 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ரிஷாட் ஹொசைன் 03 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் போட்டியின்போது மழையினால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பங்களாதேஷ் அணிக்கு 19 ஓவர்களில் 114 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பங்களாதேஷ் அணி வெற்றிபெறுமென எதிர்பார்க்கப்பட்டபோதும், ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு, களத்தடுப்பு மற்றும் அவர்களுக்கிடையிலான ஒன்றிணைந்த குழு ஆற்றல் , அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது.

பங்களாதேஷ் அணி 17.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அணி சார்பாக லிட்டன் தாஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து போராடியிருந்தார்.

பந்துவீச்சில் நவீன் உல் ஹக் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 4 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக நவீன் உல் ஹக் தெரிவுசெய்யப்பட்டார்.

இன்றைய வெற்றியுடன் ஆப்கானிஸ்தான் அணி , 2024ம் ஆண்டுக்கான டி-20 உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மற்றுமொரு அரையிறுதி போட்டியில் ஒன்றையொன்று எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி

நான்கு மாவட்டங்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

அடுத்த செய்தி

லுனுகலை, ஸ்ரீ இராமகிருஷ்ணா இந்துக் கல்லூரிக்கு, இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமாரின் உதவி

தொடர்புடைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரைப் பயன்பாடு அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

புரட்டாதி 24, 2026
மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!
அண்மைய செய்திகள்

மஹகொடையாய பகுதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து!

புரட்டாதி 24, 2026
சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
லுனுகலை, ஸ்ரீ இராமகிருஷ்ணா இந்துக் கல்லூரிக்கு,  இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமாரின் உதவி

லுனுகலை, ஸ்ரீ இராமகிருஷ்ணா இந்துக் கல்லூரிக்கு, இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமாரின் உதவி

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check