நான்கு மாவட்டங்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான புதிய செயலாளர்களே நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில் கொழும்பு மாவட்ட செயலாளராக கினிகே பிரசன்ன ஜனககுமாரவும் ,
களுத்துறை மாவட்ட மாவட்ட செயலாளராக ஜனக குணவர்தனவும்,
யாழ் மாவட்ட பதில் செயலாளராக எம்.பிரதீபனும் ,
கிளிநொச்சி மாவட்ட பதில் செயலாளராக எஸ்.முரளிதரனும் , பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமனக்கடிதங்களை வழங்கும் நிகழ்வு பொது நிர்வாக அமைச்சில் இடம்பெற்றது.
அதன்போது பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவும் இணைந்திருந்ததாக பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.








