Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வைகாசி 22, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.  நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
திட்டம் 1,744.85 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும்

அம்பாறை நகர சபைக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன், வர்த்தக சமூகம் ஒரு சட்டப்பூர்வமான மற்றும் முறையான இடத்தில் தமது வியாபாரங்களை அபிவிருத்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதும், அம்பாறை மாவட்ட மக்களின் கலாசார வாழ்க்கையை மேம்படுத்துவதுமே இதன் நோக்கங்களாகும்.

70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருந்த மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் இந்த பலநோக்கு கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடனான அரங்குஇ வர்த்தக வளாகம், அலுவலக வளாகம் மற்றும் பாரிய அளவிலான வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பலநோக்கு கட்டிட வளாகத்தின் நிர்மாணப் பணிகள், 2028.12.31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

பல வருடங்களாக அம்பாறை நகர சபையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் அங்கு தொழிலாளராகப் பணியாற்றிவரும் ஈ. டி. ஹேமச்சந்திரவும் நிகழ்வில் ஒரு அதிதியாகக் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

நிகழ்சிவ் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கஇ அம்பாறை மாவட்டத்தின் வீதிகள்,பாலங்கள்,கால்வாய்கள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக 2026ஆம் ஆண்டிற்கு 22,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன்  இந்த நிதி ஒதுக்கீடுகளை 2026 நிதி ஆண்டிற்குள்ளேயே முறையாகப் பயன்படுத்தி மக்களுக்கு விரைவாகப் பலன்களை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எதிர்நோக்கியுள்ள சவாலானது, நாம் ஒதுக்கும் நிதியை அந்தந்த நிதியாண்டிற்குள் செலவழித்து முடிப்பதாகும்.  இந்த அம்பாறை மாவட்டத்தில் வீதிகள், பாலங்கள், கால்வாய்கள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக 2026 ஆம் ஆண்டிற்காக 22,000 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை முகாமைத்துவம் செய்து, முறையான திட்டங்களை வகுத்து,பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்குத் திட்டமிடப்பட்ட பணிகளை இந்த ஆண்டிற்குள்ளேயே செய்து முடிக்க முடியாமல் போனால், அது அடுத்த ஆண்டிற்குச் செல்லும். அப்போது அந்த ஆண்டின் பணிகள் மேலும் தள்ளிப்போகும்.

எனவே, நாம் எதிர்நோக்கும் பிரதான சவாலானது, இவ்வாறு ஒதுக்கப்படும் நிதியை அந்தந்த நிதியாண்டிற்குள் முறையாகச் செலவிடாததால் ஏற்படும் பிரச்சினையாகும். நான் அண்மையில் சில முக்கிய திட்டங்களின் அறிக்கை ஒன்றை கோரியிருந்தேன். அந்த அறிக்கையின்படி, திட்டங்களுக்காக மதிப்பிடப்பட்டிருந்த தொகை 300 பில்லியன் ரூபாவாகும்.

தாமதம் ஏற்பட்டு, அதனை உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய முடியாமல் போனதன் காரணமாக 600 பில்லியன் ரூபா செலவை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மதிப்பிடப்பட்ட 300 பில்லியன் ரூபா பெறுமதியான பணிகளைச் செய்வதற்கு, இந்தத் தாமதத்தின் காரணமாக 600 பில்லியன் ரூபா செலவாகியுள்ளது. அதாவதுஇ அதுபோன்ற பல பணிகளைச் செய்யக்கூடிய அளவிலான தொகையாகும்.

எனவே  இவ்வாறு ஒதுக்கப்படும் நிதியை முறையாகச் செலவிடுவது நமது எதிர்பார்ப்பாகும். அடுத்த வருடத்தை இலங்கையில் அதிகூடிய மூலதனச் செலவினங்களைக் கொண்ட வருடமாக நாம் மாற்றுவோம். அடுத்த வருட மூலதனச் செலவினங்களுக்காக 2000 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதபதி குறிப்பிட்டார்.

 

 

முந்தைய செய்தி

நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக கன மழை

அடுத்த செய்தி

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

தொடர்புடைய செய்திகள்

ஜப்பானில்  7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அண்மைய செய்திகள்

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆடி 28, 2026
ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு
அண்மைய செய்திகள்

ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

ஆடி 28, 2026
இன்று முதல்   3 தினங்களுக்கு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
அண்மைய செய்திகள்

83 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர்கள்

ஆடி 28, 2026
உயர்தர பரீட்சையின் எஞ்சிய பரீட்சைகள் இன்று ஆரம்பம்
அண்மைய செய்திகள்

A/L  பரீட்சை. அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம்

ஆடி 27, 2026
மக்களின் ஆதரவு தொடர்ந்தும்  அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
அண்மைய செய்திகள்

மக்களின் ஆதரவு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கே. பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ஆடி 27, 2026
இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .
அண்மைய செய்திகள்

இன்று  முதல் ஜூலை 31 வரை தேசிய நேர்மை வாரம் .

ஆடி 27, 2026
இலங்கை பொலிஸ் துணை சேவையில்  ஆட்சேர்ப்பு
அண்மைய செய்திகள்

இலங்கை பொலிஸ் துணை சேவையில் ஆட்சேர்ப்பு

ஆடி 26, 2026
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி புதிய தபாலகம் அங்குரார்ப்பணம்

ஆடி 26, 2026
அடுத்த செய்தி
பாடசாலை மாணவர்களுக்கு நாளை விடுமுறை

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.