நாட்டில் அமுலிலுள்ள பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை,மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளமைக்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க சனத்குமாணநாயக்க கையொப்பத்துடன் வெளியிட்டுள்ளார்.
டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களை தொடர்ந்து மக்களுக்கு நேர்த்தியான சேவைகளை வழங்கும் நோக்கில் பொது அவசரகால நிலை கடந்த வருடம் நவம்பர் 29ம் திகதி அமுல்படுத்தப்பட்டது.
தொடர்ந்தும் டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான நிவாரணப்பணிகளும், சேதங்களை சீர்செய்யும் பணிகளும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.









