ஏட்ரியன் நிறுவனத்தினருக்கும் இயக்குனர் தினேஷ் கனகராஜ்க்கும் முதலில் வாழ்த்துகள். மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள இலங்கையின் புதிய முழுநீள திரைப்படமான ‘அதிரன்’ திரைப்படம் வெற்றியடையவேண்டும். அந்த வெற்றி மேலும் பல படைபாளிகளுக்கு ஊக்கமளிக்கட்டும்.
அதிரன் திரைப்பட பூஜை நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் கொழும்பிலுள்ள ஶ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.
திரைப்படத்தின் தயாரிப்பாளர் தீப்திகா ஞானசேகரன் மற்றும் திரைப்படத்தின் கதாநாயகனான முன்னணி நடிகர் சுதர்சனுடன் கதாநாயகியான சிங்கள சினிமாவின் முன்னணி கதாநாயகியான மிச்சலா தில்ஹாரா ஆகியோரும்இ திரைப்படத்தில் பணியாற்றவுள்ள ஏனைய கலைஞர்களும் தொழில்நுட்பவியலார்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அதிரன் திரைப்படமானது இலங்கையின் கிராமத்து சூழ்நிலையை பிரதிபலிக்கும் கதைக்களமாக அமைய இருப்பதாகவும் இலங்கையின் மிகப் பிரம்மாண்டமான ஒரு திரைப்படமாக வர இருப்பதாகவும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் திரையிடப்பட உள்ளதாகவும் இயக்குனர் தினேஷ் கனகராஜ் தெரிவித்தார். இப்படம் நேர்த்தியாக அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் அமையுமென இயக்குனர் தினேஷ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் திரைப்படத் துறையை மாற்றுவதற்காக ஏட்ரியன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள முயற்சி பாராட்டபடவேண்டுமென கதாநாயகன் சுதர்சன் குறிபிட்டார்.
கதாநாயகன் சுதர்சன் இந்திய திரைத்துறையில் தடம்பதித்துள்ள மற்றுமொரு நம்மவர்.
இத்திரைப்படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் அனைவருக்கும் இன்று இணையதளத்தின் வாழ்த்துக்கள்.









