தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் 21 ம் திகதி மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கும், கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும்
21 ம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தினத்திற்கு பதிலாக எதிர்வரும் (25) சனிக்கிழமை பாடசாலைகளை நடாத்துமாறு சகல அதிபர்களுக்கும் உரிய தரப்பினரால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.








