பஸ்களில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது ஒக்டோபர் 01ம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பயணச்சீட்டுக்களை வழங்காத பஸ்வண்டிகள் தொடர்பில் தற்போது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் 217 பஸ்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், பயணச்சீட்டு வழங்காத 18 பஸ் நடத்துனர்களுக்கு எதிராகவும், பயணச்சீட்டு இன்றி பயணித்த 5 பயணிகளுக்கெதிராகவும் அபராதம் விதிக்கப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
பஸ் பயணத்தின்போது பயணச்சீட்டை வைத்திருக்காத பயணிகளுக்கு 100 ரூபாய் அபராதமும், பயணக்கட்டணத்தை இருமடங்காகவும் செலுத்த வேண்டிவரும்.
பயநடத்துனர்கள் பயணச்சீட்டு வழங்காத பட்சத்தில் , அது குறித்து 070-2860860 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்ய முடியுமென
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ஜாசிங்க தெரிவித்துள்ளார்.








