பல்கலைக்கழக பேராசிரியர் சங்க சம்மேளனம் இன்றைய தினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் சங்க சம்மேளனம் செயலாளர் சிரேஸ்ட விரிவுரையாளர் ஷாருதத்த இளங்கசிங்ஹ தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்ட போதும் அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் நெருக்கடிகளுக்கு இதுவரை தீர்வு பெறப்படவில்லையெனவும் தற்போது அரச கல்வி வீழ்ச்சியடைந்துள்ளதோடு, பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக சிரேஸ்ட விரிவுரையாளர் ஷாருதத்த இளங்கசிங்ஹ தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக பேராசிரியர்களின் பற்றாக்குறை தற்போது கடுமையான நிலையிலுள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200 பேராசிரியர்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.









