சாரதி அனுமதி அட்டைகளை புதுப்பிக்கும் போது வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையிலுள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திலேயே வழங்கப்படுமென மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் முதல் பரீட்சாத்த முன்னோடித் திட்டமாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாகவும் அதன் சாதக தன்மை மற்றும் செயற்பாட்டு ரீதியான வெற்றியின் அடிப்டையில் திட்டம் தொடருமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சாரதி அனுமதி அட்டைகளின் புதுப்பித்தல் செயல்பாட்டின் போது தற்போது காணப்படும் சாரதி அனுமதி அட்டையில் எவ்வித மாற்றங்களும் தேவையில்லையெனவும்இ தற்காலிக அனுமதிப் பத்திரத்தை நுகேகொடை போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியுnமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களுக்காக இன்று முதல் வேரஹெர மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திற்குச் செல்லவேண்டிய தேவையில்லையெனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.









