பஸ்களை அலங்கரிப்பதற்கும் , மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் 2023 ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் திகதி குறித்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதியுடன் அமுலாகும் வகையில் சுற்றுநிருபம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பஸ்களை தமக்கேற்ற வகையில் அலங்கரிக்க அனுமதி கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டுஇ பல்வேறு நிபந்தனைகளுடன் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









