வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் இன்று முதல் மீளாய்வுக்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி வரை ஒன்லைன் மூலம் விடைத்தாள் மதிப்பீடுகள் குறித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்தில் பாடசாலை அதிபரினூடாக வழங்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை பயன்படுத்திஇ பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் மீள்திருத்தத்திற்கான பகுதியினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.









