வங்கிகளினூடாக பணப்பரிசில்கள் வழங்கப்படுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையென பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பணப்பரிசில்கள் வழங்கப்படுவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் மோசடி தகவல்கள் பகிரப்பட்டுவருகின்றன.
இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் செய்தியென பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், தொலைபேசிகளில் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும் இத்தகைய மோசடி தகவல்கள் பகிரப்படுகின்றன.
இது தொடர்பில் கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கைடயக்க தொலைபேசிகளினூடாக வங்கி சேவைகளை முன்னெடுப்போர் இது குறித்து அவதானத்துடன் இருக்கவேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.









