நாளை மறுதினம் சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
7ம் திகதி இரவு 8.58 மணி முதல் 8 ம் திகதி அதிகாலை 2.25 மணி வரை சுமார் 5 மணி நேரம் 27 நிமிடங்கள் சந்திர கிரகணத்தைக் காண ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்வதாலும், பூமியின் இருண்ட நிழல் வழியாக சந்திரன் கடந்து செல்வதாலும் சந்திரன் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் இருளாக இருக்கும்.
உலகளாவிய மக்கள்தொகையில் சுமார் 85 சதவீதத்தினருக்கு முழுமையான அல்லது பகுதி கிரகணமாக இதனை பார்வையிட முடியுமென பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.









