வெளியாகியுள்ள 2025 , தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் யாழ் மாணவன் முன்னிலை பெற்றுள்ளார்.
யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், 194 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவர் சிறப்பாக செயற்பட்டு, தனது பாடசாலைக்கும் , யாழ் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் லதாநந்தினி சிவபாதம் தெரிவித்தார்.
இதனிடையே காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி ஷனுதி அமாயா அஸ்வினி, சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2025 ம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04) அதிகாலை வௌியிடப்பட்டன.
இதேவேளை இவ்வருடம் தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் சிங்கள மொழி மூலம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 303 பேரும் , தமிழ் மொழி மூலம் 74 ஆயிரத்து 368 பேருமாக மொத்தம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 671 பேர் பரீட்சைக்கு தோற்றினர்.
இதில் 51ஆயிரத்து 969 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேலாக புள்ளிகளை பெற்றுள்ளதாகவும் இது 17.11 வீதம் எனவும் கடந்த வருடத்தினை விட 1.06 வளர்ச்சியினை காட்டுவதாக பரீட்சை ஆணையாளர் ஏ.கே.எஸ் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.









