மாதாந்த எரிபொருள் விலை மறுசீரமைப்புக்கமைய நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய 92 ரக பெற்றோல் , ஒட்டோ டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லையென கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
92 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் புதிய விலை 299 ரூபா.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 313 ரூபா.
ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் புதிய 283 ரூபா.
ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் தொடர்ந்தும் 341 ரூபாவுக்கும், மண்ணெண்ணய் ஒரு லீட்டர் 185 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுமென இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள விலை மறுசீரமைப்பு குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.









