அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களில் சாரதி மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய வீதி பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களினால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,350 பேர் உயிரிழக்கின்றனர். மேலும் 6,000 பேர் படுகாயமடைகின்றனர்.
அதற்கமைய ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது சீட் பெல்ட் பொருத்தப்படாத வாகனங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும்.
குறித்த காலப்பகுதியின் பின்னரும் இந்நடைமுறை அமுல்படுத்தப்படாத பஸ்களுக்கான அனுமதி தடை செய்யப்படுவதோடு, அவற்றின் உரிமங்களும் ரத்து செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.









