ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு தினங்கள் அங்கு தங்கவுள்ள ஜனாதிபதி யாழ் மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
நாளைய தினம் யாழ் மைலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் 03வது கட்ட பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அத்துடன் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினையும் ஜனாதிபதி திறந்துவைக்கவுள்ளார்.
மேலும் யாழ் மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள நவீன கிரிக்கெட் மைதானத்தின் பணிகளும் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
இதேவேளை நாளை மறுதினம் உலக தென்னை தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி இணைந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன் முல்லைத்தீவு வட்டுவாக்கல் பாலத்தின் நிர்மாணப் பணிகளையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆரம்பித்துவைக்கவுள்ளார்.









