சிம்பாப்பே மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் 2வது இன்று நடைபெறவுள்ளது.
ஹராரேயில் போட்டி நடைபெறவுள்ளது. முதல்போட்டியில் இலங்கை அணி இறுதிநேரத்தில் வெற்றியை பதிவுசெய்தது. டில்ஷான் மதுஷங்கவின் ஹெட்ரிக்கினால் இலங்கையணிக்கு வெற்றி கிடைக்கப்பெற்ற நிலையில் இன்றைய போட்டியும் விறுவிறுப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் போட்டி ஆரம்பமாகவுள்ளது.









