வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் மூன்று கோடி ரூபாய் வரை பணத்ததை சந்தேகநபர் மோசடிசெய்துள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவில் முன்வைக்கப்பட்ட முறைபாட்டை அடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
டுபாயில் உணவகம் மற்றும் வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்புகள் காணப்படுவதாக கூறி , 12 இலட்சம் ரூபா முதல் 15 இலட்சம் ரூபாய் வரை சந்தேகநபர் வௌ;வேறு நபர்களிடம் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக 49 முறைப்பாடுகள் வரை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்வுள்ளார். ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்









