அனைத்து குடிமக்கள் மீதும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும். ஊழல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் கடும் தண்டனையை எதிர்கொள்வார்களென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசு வீடுகளும் அரசாங்கத்தால் திரும்ப பெறப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இச்செயற்பாடானது பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும், நீதியை உறுதிசெய்வதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு கட்டமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தனது நிர்வாகத்தின்கீழ் எந்தவொரு தனிநபரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லையெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.









