நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நபர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கொழும்பு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் குறித்த தரப்பினருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதனிடையே நீதிமன்ற வளாகத்திற்குள் உத்தியோகபூர்வ அனுமதியின்றி உள்நுழைந்து வீடியோக்களை பதிவுசெய்தவர்கள் தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் நீதவான், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் கேள்விக்குரிய வழக்கொன்று தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட யூடியூபர் குறித்தும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஏற்கனவே குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.









