சிறைச்சாலை கைதிகளின் படைப்புத் திறமைகள் மற்றும் திறன்களைக் கொண்ட ‘சிரசர ஷில்ப 2025 தொழில் மற்றும் விற்பனை கண்காட்சி’ பத்தரமுல்லையில் தியத வளாகத்தில் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும்.
சிறைக்கைதிகளின் படைப்புகளை தேசிய அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில் கண்காட்சி தொடங்கப்பட்டது.
சட்டத்தினால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளான நபர்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவது சமூகத்திற்கு சிறந்த நபர்களாக அவர்களை உருவாக்கும் நோக்கிலேயே என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
கண்காட்சியில் காட்சிப்படுத்தும் கைதிகளின் திறமைகளை பாராட்டுவதற்காக அவர்களின் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வருகை தருமாறு பொதுமக்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.








