இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் பிரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் போட்டியில் இன்றைய தினம் 4 ஆவது சுற்று நடைபெற்றது.
அதில் நோர்வே வீரரான கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா மோதிக்கொண்டனர்.
போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி வெற்றியை தனதாக்கினார்.
அதற்கமைய 4.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா தனது பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றார்.








