மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 3-0 என கைப்பற்றியுள்ளது. தொடரின் மூன்றாவது போட்டி சபீனா பார்க், கிங்ஷ்டன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
176 ஓட்டங்களிலான வெற்றியை அவுஸ்திரேலிய அணி பெற்றுக்கொள்ள அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டர்க் பந்து வீச்சு பெரிதும் பங்களிப்பு வழங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்டு முதல் இனிங்ஸை ஆரம்பித்தது. 225 ஓட்டங்களுக்கு பலமிக்க அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வரிசையை மேற்கிந்திய தீவு பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர்.ஸ்டீவ் ஸ்மித் 48 ஓட்டங்களையும் கெமரூன் க்ரீன் 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். ஷமீர் ஜோஷப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதனையடுத்து தமது முதல் இனிஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி 143 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. ஜோன் கெம்பல் அதிகபட்சமாக 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி ஆவது இனிங்சில் 121 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. அல்ஷாரி ஜோசப் 5 விக்கட்டுகளையும், சமீர் ஜோசப் 4 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
இரண்டாவது இனிங்சில் 204 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு காணப்பட்டபோதும் மிச்செல் ஸ்டெக்கின் அபார பந்துவீச்சில் 27 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுகளையும் மேற்கிந்திய தீவுகள் இழந்தது.
அணியின் 7 வீரர்கள் ஓட்டமெதும் பெறாத நிலையில் ஆட்டமிழந்ததோடு ஒரேயொரு வீரர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்ட பிரதியை பெற்றுக்கொண்டார்.
மிச்செல் ஸ்டர்க் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார். அவர் வீசிய 15 பந்துகளில் குறித்த ஆறு விக்கட்டுகளும் வீழ்த்தப்பட்டமை விசேட அம்சமாகும்.
போட்டியின் ஆட்டநாயகனாகவும், போட்டித்தொடரின் ஆட்டநாயகனாகவும் மிச்செல் ஸ்டர்க் தெரிவுசெய்யப்பட்டார்.
மிச்செல் ஸ்டர்க் 400 விக்கட்டுக்களை கைப்பற்றிய அவுஸ்திரேலிய வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.









