சட்டவிரோதமாக கொண்டுவரபட்ட உதிரிபாகங்களை பொருத்தி உருவாக்கப்பட்ட வாகனம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்க இன்றைய தினம் (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்.
சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வௌியேறிச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நான்காவது முறையாக தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் அரசியலில் ஈடுபடுபவர்களை வேட்டையாடும் செயற்பாட்டடை முன்னெடுப்பதாகவும் அதன்போது ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.
இவ்வாறான செயல்பாடுகள் மூலம் அரசியல்வாதிகளை அரசியலிருந்து ஓரங்கட்ட முயற்சிப்பதாகவும், தான் எதனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வதாகவும் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.









