இவ்வாண்டு ஜனவரி 01ம் திகதி முதல் ஜூலை 13ம் திகதி வரை 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 37 பேர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட 24 பேரும் , அதன்போது வாகன சாரதிகளாக செயற்பட்ட 15 சாரதிகளும் , மேலும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள உதவி வழங்கிய 150 பேரும் , இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் , உதவி பொலிஸ் அத்தியட்சகர்எஃப். யு. வூட்லர் தெரிவித்தார்.









