விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தியின் தாயார் சிறைச்சாலை வைத்து உயிரிழந்துள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியின் தாயார் சிறையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரன் ஆகியோர் கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரலுக்கமைய அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.









