சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றபட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்தில் காணப்படும் பறவைகளுக்கான தீவனக் களஞ்சியத்தில் குறித்த மோட்டார் சைக்கில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலிபோது அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
நாட்டிற்கு இறக்குமதி செய்யத் தடைசெய்யப்பட்டஇ வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டஇ 21 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. குறித்த மோட்டார் சைக்கிள்களின் பெறுமதி ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமாகுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பறவைகள் சரணாலய வளாகத்தில் வளர்க்கப்பட்ட 04 கஞ்சா செடிகளும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
சரணால முகாமையாளர் மற்றும் களஞ்சிய கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.









