ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அணி அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம்.முஷாரப் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் தலைவர்இபாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவருக்கான நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது.
கட்சியின் உயர்பீடக் கூட்டம் இன்று(10)இ கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது குறித்த நியமனம் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது.
கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர்ஈ கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள்இ உட்பட உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் அதன்போது இணைந்திருந்தனர்.









