ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு பயணிக்கவுள்ளார்.
இன்றை தினம் விஜயம் ஆரம்பமாவுள்ளது. விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்வுள்ளார்.
மேலும் இந்திய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுக்களை நடத்துவாரெனவும் முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வர்த்தக திட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.
ஜனாதிபதியுடன் அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் விஜயத்தில் இணையவுள்ளனர்.








