சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழிவு
தற்போது வெற்றிடமாகவுள்ள சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, லக்க்ஷமன் நிபுணாரச்சி ஆகியவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கம் எதிர்வரும் சில தினங்களில் இது தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கஇ இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.








