பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து லொஹான் ரத்வத்த கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பதிவுசெய்யப்படாத கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நேற்று (05) பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









