நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் விலை அதிகரிப்பிற்கு தீர்வாக எதிர்வரும் 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு விற்பனைசெய்யப்படவுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
சதொச ஊடாக 130 ரூபாய்க்கு தேங்காய் விற்பனைசெய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்குரிய தென்னந்தோப்புகளில் பெறப்படும் தேங்காய்களே குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.









