தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வில் ரூ.68 கோடியே 31 இலட்சம் செலவில் நிறைவடைந்த 44 அபிவிருத்திப் பணிகளை அவர் திறந்து வைத்தார்.
மேலும், ரூ.11 கோடியே 72 இலட்சம் மதிப்பீட்டிலான 70 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்துடன், 13,676 பயனாளிகளுக்கு ரூ.62 கோடியே 73 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
ரூ.23.25 கோடியில் புதிய பேருந்து நிலையம்
இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, ரூ.23.25 கோடி செலவில் கட்டப்பட்ட புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்தப் பேருந்து நிலையத்தில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதிகள், வணிக வளாகங்கள், பயணிகள் காத்திருப்பு அறைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ரூ.6.29 கோடி செலவில் அமைக்கப்பட்ட பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கையும் அவர் திறந்து வைத்தார்.
70 புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
அடிக்கல் நாட்டப்பட்ட 70 புதிய திட்டங்களில் 23 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களும், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளும் உள்ளடங்குகின்றன.
இதற்கிடையில், விவசாயிகளுடனும் முதலமைச்சர் கலந்துரையாடியுள்ளார். குறிப்பாக, காவிரி நீரைப் பாசனத்திற்குப் பெற்றுக்கொள்வது தொடர்பான தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.
மொத்தமாக, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, புதிய திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் இந்த விஜயத்தின்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.








