ஜப்பானின் மியே மாகாணத்தில் உள்ள ஷிமா நகருக்கு தென்கிழக்கே சுமார் 58 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
6.0 ரிக்டர் அளவில் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 352 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஜப்பான் பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








