சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகப் பொது அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
கைபேசிகளுக்கு National Warning Alerts கிடைக்கும் சந்தர்ப்பங்களில், உடனடியாக பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும், ஜன்னல்கள், கண்ணாடிகள், பால்கனிகள் மற்றும் கூரைகளிலிருந்து விலகி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளியில் இருப்பவர்கள் அருகிலுள்ள பாதுகாப்பான கட்டடத்திற்குள் செல்லுமாறும் அல்லது பலமான சுவரின் பின்னால் பாதுகாப்பாக ஒதுங்கிக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களைத் தவிர்க்குமாறும், வாகனம் செலுத்துபவர்கள் வாகனத்தை சாலையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி, பாலங்கள் மற்றும் உயரமான கட்டடங்களிலிருந்து விலகி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பவங்களை புகைப்படம் அல்லது காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறும், சவூதி அரேபியாவின் சட்டங்களை கடுமையாகப் பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும் இலங்கை மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அவசர தொடர்பு இலக்கங்கள்:
📞 மக்கா மற்றும் மதீனா – 911
📞 ஏனைய பகுதிகள் – 998
📞 இலங்கை துணைத் தூதரக அவசர இலக்கம் – 056 098 6671









