முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித சிறிவர்தன தலா 50 ஆயிரம் ரூபாயும், அப்போதைய பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்துக்க டி சில்வா தலா 10 ஆயிரம் ரூபாயும் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தங்களை சட்டவிரோதமாக கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.









