செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அதனூடாக வெளியாகும் பரபரப்புக்களும் குறைவின்றியே காணப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் மனதை பதறவைக்கும் வகையிலான செய்திகளும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
அதற்கமைய அமர்ந்த நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு பார்ப்பவர்களின் மனதை நிலைகுலையச் செய்துள்ளது.
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 37 ஆம் நாள் அகழ்வுப் பணிகளின்போது குழியில் கால்கள் மடக்கி அமர்த்தி வைக்கப்பட்ட நிலையில் எலும்புக் கூட்டுத் தொகுதி மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டன.
இதன்மூலம் செம்மணி மனித புதைகுழி அகழ்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 446 மனித எலும்புக்கூடுகள் சசுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 434 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்விலும் இதேபோன்று கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக் கூட்டுத் தொகுதியொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.









