வெற்றிலைப்பாக்குடன் , புகையிலை சேர்த்து விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் முதலாவது அட்டவணையின்படிஇ நாட்டில் புகையற்ற புகையிலைத் தயாரிப்புகளை விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இது வெற்றிலைப்பாக்கு விற்பனையாளர்களை அசௌகரியத்திற்குள்ளாக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டம் அல்ல என்றும்இ நாட்டு மக்களை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட சட்டம் என்றும் உபுல் ரோஹண தெரிவித்தார்.
நாட்டில் வருடாந்தம் 1,750 க்கும் 1,900 க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாகின்றனர்.
இதன் காரணமாக இச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி மக்களை வாய் புற’றுநோய் நிலைமையிலிருந்து பாதுகாப்பதற்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கமைய எதிர்காலத்தில் வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளது.
புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டால், 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபில் ரோஹண எச்சரித்துள்ளார்.








