வெசாக் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் தானசாலைகளை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் தானசாலைகளுக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய மிகவும் பாதுகாப்பான முறையில் உணவு வகைகளை தயாரிப்பதற்கான வாய்ப்பு உரிய தரப்பினருக்கு கிடைக்குமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியள்ளார்.
வெசாக் தினத்திற்கான தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைள் கடந்த 04ம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தானசாலைகள் அமைப்பது குறித்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அறிய இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் போன்ற உத்தியோகபூர்வ தளங்களைப் பார்வையிடலாம்.









