Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

பிரதமர் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

வைகாசி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
பிரதமர் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

​22 ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாடு மற்றும் பொதுநலவாய கற்றல் நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

​இந்த விஜயத்தின்போது கல்வி, அபிவிருத்தி ஆய்வுகள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பங்களிப்புகள் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல உயர்மட்ட கல்விசார் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன் ஐக்கிய இராச்சியத்தின் கல்வித் திணைக்களத்தில், அந்நாட்டின் கல்வி இராஜாங்க செயலாளர் திருமதி பிரிட்ஜெட் பிலிப்சனைச் சந்தித்து, கல்வி மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துரையாடவுள்ளார்.
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு நலன்கள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய இராச்சியத்தின் உள்நாட்டலுவல்கள் செயலாளர் திருமதி இவெட் கூப்பரையும் பிரதமர் சந்திக்கவுள்ளார்.
​அத்தோடு, 22 ஆவது வருடாந்த பொதுநலவாய கல்வி மாநாடு மற்றும் பொதுநலவாய கற்றல் நிறுவனத்தின் 2026 நிர்வாகச் சபைக் கூட்டத்திற்கு இணையாக, பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி ஷெர்லி அயோர்கொ போச்வேயையும் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
​இந்த விஜயத்தின்போது, சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் இடம்பெறும் பொது நிகழ்வொன்றிலும் கலந்துகொள்ளவுள்ள பிரதமர், அந்நிறுவனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவிலும் பங்கேற்கவுள்ளார்.
மேலும்,  ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒக்ஸ்போர்ட் உலகளாவிய மற்றும் பிராந்திய ஆய்வுகளுக்கான கல்விப்பீடத்தில் உரையாற்றவுள்ள பிரதமர்,  அங்குள்ள கல்விமான்கள் மற்றும் மாணவர்களுடனான வினா விடை அமர்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.

பிரதமரின் ​இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் கல்வி, ஆராய்ச்சி, கொள்கை ரீதியிலான கலந்துரையாடல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி ஆகிய துறைகளில் சர்வதேச கல்வி நிறுவனங்கள், சர்வதேச அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் பொதுநலவாய உறுப்பு நாடுகளுடன் இலங்கையின் ஈடுபாட்டையும் கூட்டுறவையும் மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது
​பிரதமர் ஊடகப் பிரிவு

முந்தைய செய்தி

லண்டன் பயணித்தார் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அடுத்த செய்தி

தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு இன்று

தொடர்புடைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு இன்று

தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு இன்று

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.