ஜப்பானின் வட பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் சான்ரிகு கடற்கரை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் இவாடே, அமோரி மற்றும் ஹொக்கைடோ ஆகிய மாகாணங்களுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கமைய சிலபகுதிகளில் 70 மற்றும் 80 மீட்டர் சென்றிமீட்டர்களில் சுனாமி அலைகள் தாக்கம் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுனாமி அலை தாக்கம் ஏற்படக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ள பகுதிகிள் மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மக்கள் தாமதமின்றி வெளியேறி, எச்சரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்படும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலைகள் கணிக்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ வரக்கூடும். மேலும் எதிர்பார்க்கப்பட்டதை விட உயரமாகவும் இருக்கலாம்.
கடலோரப் பகுதிகள் மற்றும் நீர் பெருக்கெடுத்து ஓடக்கூடிய ஆற்று முகத்துவாரங்களிலிருந்து மக்கள் விலகியிருக்குமாறும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.









