எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கென நிரப்பு நிலையங்களுக்கு வருகைதரும் வாகன உரிமையாளர்கள், போதிய தெளிவுடன் செயற்படவேண்டுமென பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டில் சீரான எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கென வாகன இலக்கத்தின் கடைசி எண் மற்றும் QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய எரிபொருள் நிரப்புவதற்கான கடைசி எண்ணுடன் பொருந்தாத (ஒற்றை மற்றும் இரட்டை) எண்களை கொண்ட வாகனங்கள் உடனடியாக வரிசையிலிருந்து அகற்றப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் கொண்ட வாகனங்கள் வருவதாக தெரியவந்துள்ளது.
எனவே திகதியுடன் பொருந்தாத வாகனங்கள் எரிபொருள் நிரப்ப வந்திருப்பது கண்டறியப்பட்டால், எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பு அவற்றை அகற்றுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தாமல், உரிய திகதியில் கியூஆர் (QR) மற்றும் கடைசி எண்ணின்படி எரிபொருள் நிரப்புமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.









