நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், சட்டவிரோதமாக அதனை சேமித்து வைப்பவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய சட்டவிரோதமாக எரிபொருள் வைத்திருந்தால் அவருக்கு சிறைதண்டனை விதிக்கப்படும்.
சட்டவிரோதமாக 65 லீட்டர் பெட்ரோலை வைத்திருந்த மற்றும் லொறியில் எரிபொருளைக் கொண்டு சென்ற ஒரு நபருக்கு, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் இரண்டு மாத சிறைத்தண்டனையும் 2500 ரூபா அபராதமும் விதித்துள்ளது. நீதவான் பாசன் அமரசேன குறித்த தண்டனையை விதித்துள்ளார்.
அதற்கமைய எரிபொருளை சேமித்து வைப்போரை கண்டறியும் நடவடிக்கைகள் ஆரமபிக்கப்பட்டுள்ளன.









