Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஜனாதிபதி மற்றும் EDL பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

பங்குனி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்த முறையான திட்டம் அவசியம் – ஜனாதிபதி

நாட்டின் மின்சக்தித் துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை வெல்ல ஒன்றிணைந்து செயல்படுவோமென இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நுகர்வோருக்கு நியாயமான விலையில்இ வினைத்திறனான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதும்,  புதிய நிறுவனங்களின் உரிமையை அரசாங்கத்தின் கீழ் பேணுவதன் மூலம் ஒரு நாடாக வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுமே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் இந்தச் செயல்முறையின் போது புதிய நிறுவனங்களுக்குள்ளும் உறுதிப்படுத்தப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி,  மின்சார சபையாக இருக்கும் போதே தீர்க்கப்பட வேண்டியஇ ஆனால் இதுவரை தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
இது ஒரு இலகுவான செயல்முறை அல்ல என்றும்,  நீண்ட கால மற்றும் திட்டமிடப்பட்ட ஒரு செயல்முறை என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த மாற்றம் மேற்கொள்ளப்படும் காலப்பகுதியில் ஊழியர்களுக்கும் புதிய நிறுவனங்களுக்கும் இடையே சிறந்த புரிதலுடன் கூடிய கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும், அதற்கான முறையான வழிமுறையொன்றை அமைப்பதன் அவசியத்தையும் விளக்கினார்.

அதேபோன்று, ஊழியர்களின் மன நிம்மதியை உறுதிப்படுத்தி, அவர்களின் எதிர்கால எதிர்பார்ப்புகளை இனங்கண்டு, அவர்கள் தமது சேவையைத் திருப்தியுடன் வழங்கக்கூடிய சுதந்திரமான சூழலை உருவாக்கிக் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அனைவரும் ஒன்றிணைந்து புரிந்துணர்வுடனும் நாட்டைப் பற்றிய உணர்வுடனும் செயற்படுவதன் மூலம் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,  இந்தச் செயற்பாட்டை வெற்றிகரமாக்கி நாட்டின் மின் நுகர்வோருக்குச் சிறந்த சேவையை உறுதிப்படுத்துவதற்கும், மின்சக்தித் துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை வெல்வதற்கும் ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
இந்த மாற்றத்தின் அவசியத்தை தாங்களும் அங்கீகரிப்பதாகவும் அதில் அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன் செயற்பட்டு எதிர்பார்க்கும் நோக்கத்தை அடைவதற்வு பங்களிப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் இங்கு சுட்டிக்காட்டினார்கள்.

முந்தைய செய்தி

நாட்டில் கடும் வெப்பம்.

அடுத்த செய்தி

QR  குறியீட்டை பதிவு செய்த வாகனத்திற்கு மட்டுமே எரிபொருள்….

தொடர்புடைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்
அண்மைய செய்திகள்

ஓகஸ்ட் 12ஆம் திகதி அபூர்வ பூரண சூரிய கிரகணம்

ஆடி 31, 2026
இலங்கைக்கு  ADB  200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ADB 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

ஆடி 31, 2026
இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்
அண்மைய செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் அணி புதிய பயிற்றுவிப்பாளராக ஸ்டீபன் பிளெமிங்

ஆடி 30, 2026
பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி
அண்மைய செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் 11 பொலிஸார் பலி

ஆடி 30, 2026
கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு
அண்மைய செய்திகள்

கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹராவில் ஜனாதிபதி பங்கேற்பு

ஆடி 30, 2026
மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

மன்னார் – சவுத்பார் பகுதிகளில் கடல் அட்டைகளுடன் 12 சந்தேக நபர்கள் கைது

ஆடி 30, 2026
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு  – கர்தினால்
அண்மைய செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களினால் மனித உறவுகளில் பாதிப்பு – கர்தினால்

ஆடி 30, 2026
பொலிஸ் அதிகாரி  தற்கொலை
அண்மைய செய்திகள்

பொலிஸ் அதிகாரி தற்கொலை

ஆடி 29, 2026
அடுத்த செய்தி
QR  குறியீட்டை பதிவு செய்த வாகனத்திற்கு மட்டுமே எரிபொருள்….

QR  குறியீட்டை பதிவு செய்த வாகனத்திற்கு மட்டுமே எரிபொருள்....

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.