நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலையை அடுத்து பாடசாலை மாணவர்களின் நலன் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல்களை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.
மதிய வேளையில் மாணவர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்துதல் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டு நிகழ்வுகளை நடத்துதல் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வட மேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை, மன்னார் மாவட்டங்களின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது , வெப்பச் சுட்டெண் அடிப்படையில் எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் போதுமான அளவு நீர் அருந்துமாறும் , நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் அனைவருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். அதிக களைப்பை ஏற்படுத்தும் வௌிப்புற செயற்பாடுகளை குறைத்துக் கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.









