T-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இரவு 7.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை வென்று சாதனை படைக்கக் காத்திருக்கிறது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக டி-20 உலக கிண்ணத்தை வெல்லும் முதல் அணி என்பதோடு , 2024 , T- 20 உலகக் கிண்ணம், 2025 செம்பியன்ஸ் ட்ரொபியை தொடர்ந்து மூன்றாவது ஐசிசி கிண்ணத்தை வென்ற அணி என்ற பெருமையைப் பெறுவதற்காக இந்தியா போராடும்.
இதனிடையே மிட்செல் சென்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, தனது முதல் டி20 உலக கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.









