கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்துத்தில் 15 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சிறிய ரக விமானம் ஒன்றே விபத்துக்குள்ளானதாகவும் , விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமான நிறுவனம் வெளியிட்டுள்ள பயணிகள் பட்டியலின்படி, அந்நாட்டு அரசியல்வாதியான டையோஜெனெஸ் குயின்டெரோ அமாயா மற்றும் அவரது கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் விமானத்தில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அந்நாட்டுத் தேர்தலில், அவர்கள் போட்டியிடத் தயாராக இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








