இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த மீன் பிடியில் ஈடுபட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த 35 மீனவர்கள்
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைதுசெய்துள்ளதோடு
அவர்களின் 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நாட்டுப்படகில் இருந்த 4 மீனவர்கள்,3 விசைப்படகுகளில் இருந்த 31 பேர் என மொத்தம் 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்பிடி நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.









